செய்திகள்

இந்தியாவில் புதிதாக 30,773 பேருக்கு தொற்று உறுதி

புதுடெல்லி, செப். 19–

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 30 ஆயிரத்து 773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நேற்றைய பாதிப்பைவிட இன்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு 3 கோடியே 34 லட்சத்து 48 ஆயிரத்து 163 ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 38 ஆயிரத்து 945 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 26 லட்சத்து 71 ஆயிரத்து 167 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 309 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 4 லட்சத்து 44 ஆயிரத்து 838 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரேனாவுக்கு 3 லட்சத்து 32 ஆயிரத்து 158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 85 லட்சத்து 42 ஆயிரத்து 732 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் என இதுவரை 80 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரத்து 331 டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.

உலக அளவில் 22.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. 20 கோடியே 54 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர். வைரஸ் தொற்றால் இதுவரை 46 லட்சத்து 98 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *