செய்திகள்

இந்தியாவில் புதிதாக 2,858 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுடெல்லி, மே 14–

இந்தியாவில் ஒரே நாளில் 2,858 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று முன்தினம் 2,827 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த எண்ணிக்கை நேற்று சற்று அதிகரித்து 2,841 ஆக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 2,858 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரையில் கொரோனாவால் 4 கோடியே 31 லட்சத்து 19 ஆயிரத்து 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 355 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 76 ஆயிரதபுது 815 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,092 ஆக உள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்தனர். இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்து 201 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 15 லட்சத்து 4 ஆயிரத்து 734 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 191 கோடியே 15 லட்சத்து 90 ஆயிரத்து 370 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.02 கோடி ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 47.48 கோடி பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 86 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.