புதுடெல்லி, ஜன.4–
இந்தியாவில் புதிதாக 18,177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இது மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1 கோடியே 3 லட்சத்து 23 ஆயிரத்து 965 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 217 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 435 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்து ஒரே நாளில் 20 ஆயிரத்து 923 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 99 லட்சத்து 27 ஆயிரத்து 310 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 2 லட்சத்து 47 ஆயிரத்து 220 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 17 கோடியே 48 லட்சத்து 99 ஆயிரத்து 783 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று மட்டும் 9 லட்சத்து 58 ஆயிரத்து 125 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
உலகளவில் பாதிப்பு 8.49 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளான வர்களின் எண்ணிக்கை 8 கோடியே 49 லட்சத்து 75 ஆயிரத்து 277 ஆக உள்ளது. அவர்களில் 18 லட்சத்து 43 ஆயிரத்து 313 பேர் உயிரிழந்துள்ளனர். 6 கோடியே 93 ஆயிரம் பேர் பூரண குணமடைந்துள்ளனர். சுமார் 2 கோடியே 30 லட்சத்து 38 ஆயிரத்து 964 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 510 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.