செய்திகள்

இந்தியாவில் அடுத்த மாதம் முதல் ஊசியில்லா பிளாஸ்மா தடுப்பூசி

டெல்லி, செப்.13–

ஊசியில்லாமல், தோலில் ஊடுருவிச் செல்லும் திரவம் மூலமான கொரோனா தடுப்பு மருந்து, அடுத்த மாதம் முதல் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. தடுப்பூசிகளை விரைவாக செலுத்த நடவடிக்கைகள், எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘சைடஸ் காடிலா’ (zydus cadila) நிறுவனத்தின் ஊசியில்லா கொரோனா தடுப்பூசியான சைக்கோவ்–டி (zycov-d) மருந்து அடுத்த மாதம் முதல் வாரம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ஜைடஸ் காடில்லா’

இந்த மாதம் மத்தியில் இருந்து தடுப்பூசி விநியோகம் ஆரம்பமாகும் என்றும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் கிடைக்க தொடங்கும் என்றும் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கூறியுள்ளார். முதலில் மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளும் பிறகு தயாரிப்பு இலக்கு அதிகரித்து மாதத்திற்கு 4 கோடி முதல் 5 கோடி வரை தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் 6வது தடுப்பூசியாக ‘ஜைடஸ் காடிலா’ என்ற இந்திய நிறுவனம் தயாரித்துள்ள, முதல் மரபணு (டிஎன்ஏ) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தான ஜைகோவ் – டி’க்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அவசர கால பயன்பாட்டிற்கு கடந்த அனுமதி வழங்கி உள்ளது.

இது, இது 12 முதல் 18 வயதுடைய பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ள முதல் தடுப்பு மருந்தாகும். மேலும், ஊசி மூலம் செலுத்தப்படாத உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. அமெரிக்காவின் கொலராடோவை தளமாகக் கொண்ட பார்மா ஜெட் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ள புதிய தொழில்நுட்பம் மூலம், தடுப்பூசியை வழங்க, ஊசிக்கு பதிலாக, சருமத்தில் ஊடுருவும் அதிக வேக திரவ ஜெட் பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *