செய்திகள்

இங்கிலாந்து நேஷனல் ஹெல்த் சர்வீஸ் அமைப்பின் 70வது ஆண்டு விழாவில் சாதனை மருத்துவர்களுக்கு விருது

சென்னை, டிச. 5–

இங்கிலாந்தில் வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் பாராளுமன் வளாகத்தில் நடைபெறும் இங்கிலாந்து நேஷனல் ஹெல்த் சர்வீஸ் அமைப்பு 70வது ஆண்டு விழாவில் சாதனை மருத்துவர்களுக்கு இங்கிலாந்து பாதுகாப்புத் துறை செயலர் நியா கிரிபித் எம்.பி. தலைமையில் வழங்கப்படுகிறது.

இங்கிலாந்தை சேர்ந்த ‘‘உலகத் தமிழ் அமைப்பு’’ இங்கிலாந்தில் உள்ள தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டிற்காக 2005ல் தொடங்கப்பட்டது. இன்று வரை வெற்றிகரமாக செயல்பட்ட, தற்போது இந்தியாவிலும், இங்கிலாந்திலும் மிகுந்த அனுபவம் பெற்ற மருத்துவர்களும், தொழிலதிபர்களும் மருத்துவத் துறை சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டி உதவி செய்து வருகின்றனர்.

கடந்த 70 ஆண்டுகளில் இங்கிலாந்தில் மருத்துவத் துறையிலும், பொது சுகாதாரத்துறையிலும் ‘‘நேஷனல் ஹெல்த் சர்வீஸ்’’ ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையே மேம்படுத்தி, உலக நாடுகள் பொறாமைப்படும் படியாக செய்துள்ளது. தெற்காசிய மருத்துவர்கள், குறிப்பாக இந்தியத் துணை கண்டத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் தான் இந்த மிகப்பெரிய சாதனையில் அடித்தளமாக ஆணிவேராகச் செயல்பட்டிருக்கின்றனர். அவர்கள் மருத்துவர்களாக மட்டுமின்றி, அவரவர் வாழும் மருத்துவப் பணிபுரியும் பகுதிகளில் மிகுந்த மதிப்பிற்குரியவராகவும் போற்றப்படுகிறார்கள்.

ஐரோப்பிய யூனியனில் தனது 24வது உச்சிமாநாட்டை கூட்டும் WTO–UK, இந்த மிகச்சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இதை ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. இந்திய யு.கே. சமூகத்தின் சார்பில் இந்த அரங்கில் இந்த பிரம்மாண்டமான விருது வழங்கும் விழாவையும் விருதையும் இம்மாதம் 14ந் தேதி நடத்துகிறோம்.

இவ்விழாவிற்கு தேசிய மருத்துவ சர்வீசின் உறுப்பினர்கள் ஹெல்த்கேர் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், மருத்துவக் கூட்டமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என பலர் பங்கேற்கின்றனர். இவ்விழாவின் மூலம் மிகத் தனித்துவம் வாய்ந்த இந்தியா யு.கே. உறவுகளை மேம்படுத்த மேலும் பல புதிய வாய்ப்புகள் ஏற்படும். அதுமட்டுமின்றி இரு நாடுகளுக்குமிடையே மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கான பயிர்ச்சி வசதிகளும், மருத்துவத் துறையின் கட்டமைப்பு வசதிகள் மேம்படவும் வாய்ப்புகள் அதிகமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *