செய்திகள்

ஆவடிபகுதியில் 10 இடங்களில் மின் திருட்டு; ரூ. 11.25 லட்சம் இழப்பீட்டுத் தொகை வசூல்

சென்னை, ஜூலை 22–

சென்னை அருகே ஆவடிபகுதியில் 10 இடங்களில் மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மின் திருட்டில் ஈடுபட்ட மின்நுகர்வோரிடமிருந்து இழப்பீட்டுத் தொகை ரூ. 11.25 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

13–ந் தேதி அன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்தின் சென்னை மையம், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள், சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட ஆவடி பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 10 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரூ.11 லட்சத்து 24 ஆயிரத்து 653 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.86 ஆயிரம் செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை சென்னை அமலாக்கம் செயற்பொறியாளருக்கு கைபேசி 9445857591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு மின்சார வாரியம் அமலாக்கப்பிரிவு செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *