செய்திகள்

ஆப்கான் பெண்கள் உச்சி முதல் பாதம் வரை பர்தா அணிந்துதான் வௌியில் வர வேண்டும்

தலிபான்களின் உத்தரவுக்கு பொதுச் செயலாளர் கடும் எதிர்ப்பு

வாஷிங்டன், மே 9–

ஆப்கானிஸ்தானில் பெண்கள் உச்சி முதல் பாதம் வரை முழுவதுமாக உடலை மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என்ற தலிபான்களின் உத்தரவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் அரசு, பெண்கள் மீது பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் பலவும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இது எதையும் கண்டுகொள்ளாத அவர்கள், தற்போது இஸ்லாம் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என குறிப்பிட்டு, புதிய உத்தரவை அறிவித்துள்ளது.

உச்சி முதல் பாதம் வரை முழுவதுமாக மறைத்தபடி நீலநிற பர்தா அணிந்தே வௌியில் வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள், அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தலிபான் அரசின் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸாடா தெரிவித்துள்ளார்.

தலிபான்களின் இந்த உத்தரவுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆப்கானிய பெண்கள், சிறுமிகளுக்கு தலிபான்கள் அளித்த வாக்குறுதிகளையும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் உங்கள் கடமைகளையும் நீங்கள் காப்பாற்ற வேண்டும். பெண்கள் பொது இடங்களில் முகத்தை மறைக்க வேண்டும் என்றும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் அறிவித்திருப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.