செய்திகள்

அமெரிக்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

நியூயார்க், ஜூன் 21–

அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

ஏழாவது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் இருந்தபடியே இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதன் முன்னோட்டமாக காணொலி வாயிலாக நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள், பிரபல யோகா ஆசான்கள், அனுபவம் வாய்ந்த யோகா நிபுணர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து ஒரு வார காலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏழாவது சர்வதேச யோகா தினமான இன்று மோடி காலை 6.30 மணிக்கு யோகாவால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இங்கு மட்டுமின்றி உலகம் முழுவதுமே சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு சங்கராந்தி என பெயரிடப்பட்டது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *