செய்திகள் வர்த்தகம்

அப்பல்லோ மருத்துவமனைகளில் இதுவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி: விரைவில் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் ஊசி போட ஏற்பாடு

சென்னை, மார்ச். 13–

நாடு முழுவதும் உள்ள 60 அப்பல்லோ மருத்துவமனைகளில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களில் இதுவரை 1 லட்சம் பேர் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். விரைவில் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பேருக்கு போட ஏற்பாடு செய்யப்படுகிறது என்று சேர்மன் டாக்டர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.

கொரோனா களப் பணியாளர்களைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதை தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இந்த தடுப்பூசி போடப்பட்டது. முறையாக சமூக இடைவெளி கடைப்பிடித்து, முகக்கவசம், சானிடைசர் பாதுபாப்புடன் இந்த தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்ட பிறகு அரை மணி நேரம் காத்திருக்க வைத்து, அவர்களை கண்காணித்து பிறகு வீட்டிற்கு அனுப்பி முறையாக செயல்பட்டது என்று சேர்மன் டாக்டர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த 60 கொரானா தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் சில மாநிலங்களில் பரவி வருவதால், அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்.

இம்மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் தடுப்பூசி போட ஏதுவாக தயாராகி வருகிறது. இதன் மூலம் நடப்பு ஆண்டு ஜூலை மாதத்துக்குள் நாடு முழுவதும் 50 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கை எட்ட அப்பல்லோ உதவும் என்றார் அவர்.

இங்கு தடுப்பூசி குளிரீட்டப்பட்ட வசதியுடன் இருப்பதையும் இதன் மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *