செய்திகள்

அதிகளவில் ஓட்டுப்போடுங்கள்: பிரதமர் மோடி தமிழில் டுவிட்

புதுடெல்லி, ஏப்.6–

தமிழகம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் பொதுமக்கள் அதிக அளவில் வாக்களிக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தலில் அதிகளவில் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

தமிழகம், புதுவை மற்றும் கேரளாவில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதேபோல் அசாம் மாநிலத்தில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்காளத்தில் 3ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பொதுமக்கள் காலை முதலே ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பிரதமர் டுவிட்டரில் தமிழில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோன்று, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் ஓட்டளிக்க வேண்டும் என தேர்தல் நடக்கும் அசாம், மேற்கு வங்கம் மாநில மக்களை கேட்டு கொண்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *