செய்திகள்

அக்னிபத் போராட்டம்: சென்னை மெரீனா கடற்கரையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை, ஜூன் 19–

அக்னிபத் போராட்டம் தொடர்பாக சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் ஒரு சில இடங்களில் வன்முறையாக வெடித்து ரயில்களுக்கு தீ வைக்கும் அளவுக்கு பதட்ட நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையிலும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது என்பதும் ஆங்காங்கே போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் கூடி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக தகவல்கள் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சென்னை மெரீனா கடற்கரை பகுதிபில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் கடற்கரை பகுதிக்கு வரும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.