செய்திகள்

ஆர்.என். கண்டிகை பகுதியில் இளைஞர் பாசறை புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆர்.என். கண்டிகை பகுதியில் இளைஞர் பாசறை புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்:

எஸ்.கோகுலஇந்திரா, வி.சோமசுந்தரம் பங்கேற்பு

காஞ்சீபுரம், டிச. 17 –

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க, காஞ்சீபுரம் அருகே உத்திரமேரூர் மத்திய ஒன்றியம் சார்பில் ஆர்.என்.கண்டிகை பகுதியில் கழக செயலாளர் களியாம்பூண்டி தங்கபஞ்சாட்சரம் ஏற்பாட்டின்பேரில், இளைஞர் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் மகளிர் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு காஞ்சீபுரம் மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமை வகித்தார்.

மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் எஸ்.கோகுல இந்திரா கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கி தேர்தல் குறித்து ஆலோசனை வழங்கினார். பிறகு அவர் முன்னிலையில் திரளான இளைஞர்கள், இளம்பெண்கள் அண்ணா தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர்.

இதில், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சீ பன்னீர்செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார், மாநில டான்சில்க் தலைவர் பூக்கடை ஆர்.டி.சேகர், மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன், ஒன்றிய கழக செயலாளர்கள் திருப்புலிவனம் கே.பிரகாஷ்பாபு, கே.ஆர்.தருமன், மாவட்ட பாசறை துணைத்தலைவர் திலக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *