செய்திகள்

மயிலம் கல்வி குழுமத்தில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

விழுப்புரம், மார்ச் 9–

மயிலம் கல்வி குழுமத்தில் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சர்வதேச மகளி்ர் தினத்தையொட்டி மயிலம் கல்வி குழுமத்தில் நடைபெற்ற விழாவிற்கு மயிலம் சுப்ரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ம. தனசேகரன் தலைமை தாங்கினா், துணைத்தலைவர் எஸ்.வே. சுகுமாறன் எம்.எல்.ஏ., மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் செந்தில் வாழ்த்தி பேசினா். ஒருங்கிணைப்பாளர் மற்றும் கணிப்பொறியியல் துறைத்தலைவர் பிரியா ராதிகாதேவி வரவேற்றார்., கல்லூரியின் டீன் இராஜப்பன் மற்றும் மயிலம் நர்சிங் கல்லூரி முதல்வர் பி, தமிழ்ச்செல்வி ஆகியோ் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக விழுப்புரம் மாவட்ட தலைமை கல்வி அதிகாரி ஜி, கிருஷ்ணபிரியா கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பேசுகையில், பெண்கள் தங்களை ஒரு நல்ல சக்திமிக்க தலைவர்களாக உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்றும் காந்தியின் கூற்றுப்படி தனி மனித ஒழுக்கம் தான் உண்மையான சுதந்திரம் என்று கூறினார்.

சர்வதேச மகளி்ர் தினத்தை முன்னிட்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் மாணவியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கட்டடவியல் துறைத்தலைவர் ஜான்சிராணி நன்றியுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *