செய்திகள்

சுப்ரீம் கோர்ட் போவோம்: டிரம்ப் ஆவேசம்

வாஷிங்டன், நவ.4–

அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாங்கள் அடைந்திருக்கிறோம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப், “அனைவருக்கும் நன்றி. கடுமையான சூழ்நிலையில் எங்களுடன் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. வெளியே சென்று இந்த வெற்றியை கொண்டாட நாங்கள் தயாராகி வருகிறோம். இதற்கு முன் வாக்காளர்கள் இந்த அளவுக்கு வாக்களித்தது இல்லை.

ஜோர்ஜாவில் நாங்கள் வென்றிருக்கிறோம். இது மிக முக்கியமானது. பென்சில்வேனியாவில் நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். இதுவும் முக்கியமானது. டெக்சாசில் முடிவுகள் இறுதியாகாவிட்டாலும் அங்கும் நாங்கள் வெற்றி பெறுவோம். மிச்சிகனில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்ததற்காக அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறினார்.

“புளோரிடா, டெக்சாஸ், வடக்கு கரோலினா என பல இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால், இந்த முடிவுகளை எல்லாம் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் நீதிமன்றத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்கள். அவர்கள் மோசடியை செய்கிறார்கள். இதைத்தான் ஆரம்பத்திலேயே நாங்கள் கூறி வந்தோம். வெற்றி முடிவுகள் சாதகமாக வந்து கொண்டிருந்த வேளையில் திடீரென அனைத்தையும் நிறுத்த முற்படுகிறார்கள்.”

எனவே, நாங்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்லப்போகிறோம். என்னைப் பொறுத்தவரை, நாங்கள் ஏற்கெனவே வென்று விட்டோம். எங்களுக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று டிரம்ப் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *