வர்த்தகம்

‘நியோ’ ஆண்கள் உள்ளாடைகள்: தமிழகத்தில் வீ ஸ்டார் நிறுவனம் அறிமுகம்

சென்னை, பிப். 6–

கேரளாவில் பிரபலமான வீ-கார்டு மற்றும் வொண்டர்லா தீம் பார்க் உரிமையாளர்களின் மற்றொரு அங்கமாகிய வீ ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம், ‘நியோ’ என்னும் பிராண்ட் பெயரில் ஆண்களுக்கான ஸ்டைலான உள்ளாடைகளை உருவாக்கியுள்ளது.

துணி வகை, வண்ணம், ஸ்டைல், பிட்டிங் மற்றும் எலாஸ்டிக் டிசைன் என அனைத்துமே புத்தம் புதிய வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘நியோ’ உள்ளாடை கலெக்ஷன்கள் ஹியூ ராக்ஸ், எலைட் மற்றும் கிளாசிக் என்ற 3 வகைகளில் பனியன்கள், ஜட்டிகள் மற்றும் டிரங்குகள் போன்ற அனைத்தும் கிடைக்கும்.

இது குறித்து, மேலாண் இயக்குனர் ஷீலா கொச்சவுசேப் பேசுகையில், “‘நியோ’ உள்ளாடைகள் மிக ஆழமான சந்தை ஆய்வுகளுக்குப் பிறகும், வாடிக்கையாளர்களின் கருத்துகளை கேட்ட பிறகும் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றார்.

வீ கார்டு நிறுவனத்தின் தலைவர் கொச்சௌசேப் சிட்டிலப்பள்ளி இது குறித்து கூறுகையில், “ஆண்களின் உள்ளாடைப் பிரிவில், வீ ஸ்டாரின் வளர்ச்சி இந்த ‘நியோ’ கலெக்ஷன்களால், புதிய உச்சத்தைத் தொடும்” என நம்பிக்கையுடன் கூறினார். ‘நியோ’ தயாரிப்புகளின் உன்னதமான ரகங்கள், தமிழ்நாடு முழுவதிலுமுள்ள வீ ஸ்டாரின் ஷோரூம் பெரிய துணிக்கடைகள் மற்றும் பிரபலமான ஆன்லைன் வலைதளங்களிலும் கிடைக்கும்.

இது பற்றி அறிய www.vstar.in என்ற இணையத் தளத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *