செய்திகள்

சிறந்த எடை குறைப்பு அழகுக் கலை நிறுவனம் வி.எல்.சி.சி.: இந்திய மருத்துவ சங்கம் தேர்வு

Spread the love

சென்னை, ஜன. 10

அழகுக் கலை, உடல் ஆரோக்கிய பொருள் தயாரிப்பு வி.எல்.சி.சி. நிறுவனத்தை சிறந்த முறையில் எடை குறைப்பு செயல்பாடு நிறுவனமாக இந்திய மருத்துவ சங்கம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று இதன் நிறுவனர் மற்றும் இணைத் தலைவர் வந்தனா லூத்ரா தெரிவித்தனர். தொடர்ந்து தணிக்கை, ஆய்வு மூலம் இந்த நிறுவனத்தின் தொழில் நுட்பம் கண்காணிக்கப்பட்டு, அங்கீகாரம் வழங்கப்பட்டதாக வந்தனா லூத்ரா தெரிவித்தார்.

உணவு முறை மாற்றம், உடல் செயல்பாடுகள், சிகிச்சைகள் மற்றும் நடத்தை ஆலோசனைகளை வி.எல்.சி.சி. வழங்குகிறது. எடை மேலாண்மை மற்றும் நல்வாழ்வு திட்டங்கள், ஒவ்வொரு தனி நபருக்கும் ஏற்ப பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு நல்வாழ்வு மையத்திலும், இத்திட்டங்கள், ஊட்டச் சத்து நிபுணர்கள், உடல் நிபுணர்கள், பிட்னஸ் நிபுணர்கள் மற்றும் நடத்தை ஆலோசகர்கள் உட்பட்ட குழுவினரால், ஒரு மருத்துவரின் மேற்பார்வையில் கீழ் வழங்கப்படுகிறது. வி.எல்.சி.சி. தற்போது, இந்தியாவின் 150 க்கும் மேற்பட்ட நகரங்களில் 225 நல்வாழ்வு மற்றும் அழகு மையங்களை இயக்கி வருகிறது மற்றும் தெற்காசியா, மத்திய கிழக்கு, மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள நகரங்களில் 28 மையங்களைக் கொண்டுள்ளது என்றார் அவர்.

மிகச் சிறந்த, மிகுந்த அறிவியல் சார்ந்த எடை மேலாண்மை மற்றும் நல்வாழ்வு தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாக வி.எல்.சி.சி. எப்போதும் செயலாற்றி வருகிறது.

இந்திய மருத்துவ சங்க தேசிய தேசியத் தலைவர் டாக்டர்.சாந்தனு சென் உடல் பருமன் மற்றும் அதிக எடை மற்றும் அவை தொடர்பான பிற உடல் குறைபாடுகள் வாழ்க்கை முறை நோய்கள், சுலபமாகத் தவிர்க்க கூடியவையாக இருந்தாலும் நாட்டின் மிகப் பெரிய பொது ஆரோக்கிய ஆபத்துகளில் ஒன்றாக வேகமாக வளர்ந்து வருகிறது என்றார்.

வி.எல்.சி.சி. போன்ற நிறுவனங்கள் மற்றும் அறிவியல் ரீதியிலான அவற்றின் நல்வாழ்வு மற்றும் எடை மேலாண்மை திட்டங்கள், தவிர்ப்பு ஆரோக்கிய பராமரிப்பு வழங்குவதில் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *