செய்திகள்

தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை: விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை நன்றி

விழுப்புரம், ஜன. 6–

தைப்பூச தினத்தை பொது விடுமுறை அறிவித்த தமிழக அரசுக்கு விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகை சுத்த சன்மார்க்க சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.

இது குறித்து, விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகை மேனேஜிங் டிரஸ்டி ஜெய.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

19-ம் நூற்றாண்டில், சுத்த சன்மார்க்கமும், தமிழும் தழைத்தோங்க பாடுபட்டவர் அருள்பிரகாச வள்ளலார். 51 ஆண்டுகள் மக்களோடு மக்களாய் வாழ்ந்து அருள்பெருஞ்ஜோதியாய் விளங்கிக் கொண்டிருக்கிறார். சூரியனும், சந்திரனும் கூடுகிற ஞான நிறைவைக் குறிக்கிற அடையாளக் குறிப்புதான் தைப்பூசம் எனும் திருநாள் என்கிறார் வள்ளலர். கடந்த 25.01.1872ல், வடலூர் சத்திய ஞானசபையில் முதன் முதலில் தைப்பூச ஜோதி தரிசனம் காண்பித்தார்கள். தொடர் நிகழ்வாக இந்த ஆண்டு ஜனவரி 28–ந் தேதி 150-வது பொன் விழா ஆண்டாக தைப்பூசம், சுத்த சன்மார்க்க அன்பர்களால் உலகெங்கும் கொண்டாடப்பட இருக்கிறது.

தைப்பூச தினத்தை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என சுத்த சன்மார்க்க அன்பர்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தைப்பூச தினத்தை அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளார். இது, தைப்பூச பெருவிழா கொண்டாடும் முருக பக்தர்கள் மட்டுமல்லாமல் சுத்த சன்மார்க்க அன்பர்கள்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதால், விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை அன்பர்கள் சார்பாக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *