சினிமா

‘க/பெ. ரணசிங்கம்’ படம் ‘ஜீ பிளக்ஸ்’ தளத்தில் நாளை வெளியீடு

விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த

‘க/பெ. ரணசிங்கம்’ படம் ‘ஜீ பிளக்ஸ்’ தளத்தில் நாளை வெளியீடு

ஒரு தடவை குடும்பத்தினர் பார்க்க ரூ.199 கட்டணம்

சென்னை, அக்.1

நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் ‘ஜீ பிளக்ஸ்’ டிஜிட்டல் தளத்தில் நாளை 2 ந் தேதி வெளியாகிறது. இதை ஒரு தடவை மட்டும் குடும்பத்தினர் பார்க்க கட்டணம் ரூ.199 ஆகும்.

டாடா ஸ்கை, டிஷ் டிவி, டி2 எச் போன்ற டிஷ் டிவியிலும் தொடர்பு கொண்டு ரூ.199 கட்டணம் செலுத்தி இந்த திரைப் படத்தை பார்க்கலாம்.

‘ஜீ பிளக்ஸ்’ செயலி பதிவிறக்கம் செய்து அன்லைனில் பணம் செலுத்தி இந்த படத்தை பார்க்கலாம். அமேசான், ஹாட் ஸ்டார் போன்றவை போல ஜீ பிளக்ஸ் திரைப் படங்களை வெளியிட உள்ளது. இந்த க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் டைரக்டர் பி.விருமாண்டி ஆவார். இதில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ரங்கராஜ் பாண்டே, யோகிபாபு, சமுத்ரகனி, வெள்ளை ராமமூர்த்தி, ஸ்ரீராம் நடித்துள்ளனர். திப்ரன் இசை அமைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *