செய்திகள்

ராஜஸ்தான் லாரி உரிமையாளருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம்

Spread the love

புதுடெல்லி,செப்.11–

விதிமுறைகளை மதிக்காததற்காகவும், அதிக எடை கொண்ட பொருட்களை ஏற்றி சென்றதற்காகவும் ராஜஸ்தானை சேர்ந்த லாரி உரிமையாளர் ஒருவருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாட்டின் பல மாநிலங்களில், புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், டெல்லியில் நடந்த வாகன சோதனையில், ராஜஸ்தானை சேர்ந்த பகவான் ராம் என்பவருக்கு சொந்தமான லாரியை மடக்கி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எடையை ஏற்றி சென்றது, உரிய அனுமதி பெறாதது உள்ளிட்ட காரணங்களுக்காக, பகவான் ராமுக்கு ரூ.1.41,700 அபராதம் விதிக்கப்பட்டது. பகவான் ராம், அபராதத்தை டெல்லி கோர்ட்டில் செலுத்தி லாரியை மீட்டு சென்றார்.

புது சட்டம் அமலுக்கு வந்த பின்னர், அதிக அபராதம் செலுத்திய நபர் இவர் ஆவார். முன்னதாக, ஒடிசாவில் போக்குவரத்து விதிகளை மீறிய லாரி டிரைவருக்கு, மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் கீழ், 86 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *