செய்திகள்

தாஜ் மகாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சுற்றுலா பயணிகள் வெறியேற்றம்

புதுடெல்லி, மார்ச் 4–

தாஜ் மகாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்புக் காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

உத்தரப்பிரதேசத்தின் அவசர உதவி எண்ணான 112-ஐ தொடர்பு கொண்ட மர்ம நபர், தொல்லியல் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தாஜ் மகாலுக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்தார். மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் ஆயுதம் தாங்கிய வீரர்களின் பாதுகாப்பின் கீழ் இருக்கும் தாஜ் மகாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, உத்தரப்பிரதேச காவல்துறை, தொழிற் பாதுகாப்புப் படைக்குத் தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து காலை 9.15 மணிக்கு தாஜ் மகாலுக்குள் இருந்த பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. இதில், வெடிகுண்டு எதுவும் இல்லை என்றும், தொலைபேசி அழைப்பு வெறும் புரளி என்றும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த தொலைபேசி அழைப்பு பிரோசாபாத்திலிருந்து வந்திருப்பதை, போலீசார் கண்டுபிடித்துள்ளது. இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *