சினிமா

சூர்யாவுக்கு 39; ஹரிக்கு –16; ஞானவேல்ராஜாவின் ‘அருவா’வில் முதல்முறையாக இசைக்கும் டி.இமான்!

Spread the love

புகழ் பெற்ற வெற்றி கூட்டணி சூர்யா – இயக்குனர் ஹரி – தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா மீண்டும் ”அருவா” திரைப்படத்துக்காக இணைகிறார்கள்!

இந்தியாவில் ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக்காகி, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் மாபெரும் வெற்றி பெற்று, நேரடி தமிழ் படங்களுக்கு நல்ல வியாபாரத்தை வெளிமாநிலங்களில் ஆரம்பித்து வைத்த திரைப்படம் சிங்கம். சூர்யா நடிப்பில் வெளிவந்த இப்படத்தை இயக்குநர் ஹரி இயக்கி, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

“அருவா“ சூர்யாவின் 39வது படம். இயக்குனர் ஹரிக்கு 16வது படம், சூர்யாவும் இயக்குனர் ஹரியும் இணையும் 6வது படமாகும். இவர்களுடன் முதன் முறையாக இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் டி.இமான் இணைகிறார்.

இந்தியளவில் புகழ் பெற்ற முன்னணி நடிகை ஒருவர் இதில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கி ஒரே ஷெட்யூலாக நடைபெற்று 2020 தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது என்று தகவல் தந்தார் மக்கள் தொடர்பாளர்கள் சுரேஷ் ரகு, தர்மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *