செய்திகள்

மின்னணு வாக்காளர் அட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள 13, 14ம் தேதி சிறப்பு முகாம்

சென்னை, மார்ச் 3–

மின்னணு வாக்காளர் அட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள வாக்குச்சாவடி அமைவிடங்களில் 13, 14ம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி கூறியிருப்பதாவது:–

சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்–2021–ன் போது, புதிதாக வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் தங்களது செல்லிடப்பேசி எண்ணை வழங்கிய வாக்காளர்கள் அனைவருக்கும் மின்னனு வாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்திரவின்படி, 13–ந் தேதி (சனிக்கிழமை) மற்றும் 14–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் (தோராயமாக 30,400 இடங்கள்) சிறப்பு முகாம் நடத்த அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்–2021 இன் போது வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் இம்முகாமினைப் பயன்யபடுத்தி தங்களது மின்னனு வாக்காளர் அடையாள அட்டையினை தங்களது செல்லிடப்பேசி, கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இத்தகவலை தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *