செய்திகள்

தரை இறங்கிய போது வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

வாஷிங்டன், மார்ச் 5–

தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்டார்சிப் எஸ்என்–10’ என்ற ராக்கெட் தரையிறங்கிய போது வெடித்துச் சிதறியது.

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறையினருக்கான ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளை தயாரித்து வருகிறது. செவ்வாய் மற்றும் நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் வகையில், ஸ்பேஷிப் ராக்கெட்டுகளை தயாரித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, நேற்று டெக்சாஸில் உள்ள போகா சிகாவில் இருந்து ‘ஸ்டார்சிப் எஸ்என்–10 (Starship SN – 10) ராக்கெட் சோதனை முறையில் விண்ணில் அனுப்பப்பட்டது.

மீண்டும் வெடித்தது

ஏற்கனவே இதுபோன்ற ஸ்பேஸ்ஷிப் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி சோதனை செய்து பார்த்தது. ஆனால் அந்த ராக்கெட்டுகள் இரண்டு தரையிறங்கியபோது வெடித்துச் சிதறின. இந்நிலையில் மூன்றாவது முறையாக, முந்தைய குறைபாடுகளைச் சரிசெய்து, ‘ஸ்டார்சிப் எஸ்என்–10’ என்ற ராக்கெட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று விண்ணில் செலுத்தி சோதனை செய்தது.

ஆளில்லாமல் அனுப்பப்பட்ட இந்த ராக்கெட், வெற்றிகரமாக தன்னுடைய இலக்கை அடைந்தது. மீண்டும் ஸ்பேஸ் எக்ஸ் தரைதளத்தை அடைந்த சில நிமிடங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடித்துச் சிதறியது. இதில் ராக்கெட்டின் பாகங்கள் விண்ணில் தூக்கி எறியப்பட்டது. இந்த ராக்கெட் வெடிவிபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த ராக்கெட் வெடிப்பு குறித்து பேசிய எலான் மஸ்க், ‘ஸ்டார்சிப் எஸ்என்–10’ ராக்கெட், சோதனை ஓட்டத்தில் எங்களுக்குத் தேவையான ஆய்வு விவரங்களை சேகரித்து கொடுத்துள்ளது. அதுவே எங்களுக்கான வெற்றி என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *