வர்த்தகம்

சோனாலிகா டிராக்டர் 11 மாதத்தில் 1 லட்சம் விற்பனை

சென்னை, மார்ச் 3–

சோனாலிகா டிராக்டர் நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் 11 ஆயிரத்து 821 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இது, 9,650 டிராக்டர்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது.

130 நாடுகளில் விற்பனையாகும் சோனாலிகா டிராக்டர் நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

சோனாலிகா குழுமத்தின் செயல் இயக்குனர் ரமன் மித்தல், “கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், நடப்பாண்டு பிப்ரவரி வரையிலான 11 மாதங்களின் உள்ளூர் விற்பனையில், இதுவரை எட்டாத அதிகபட்ச விற்பனை அளவாக 1 லட்சத்து 6 ஆயிரத்து 432 டிராக்டர்களை விற்பனை செய்திருக்கிறோம். இதன்மூலம் கடந்த ஆண்டில் இருந்த நிலையில் இருந்து 35.5% சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறோம் என்றார்.

இந்தியச் சந்தையில் சோனாலிகா டிராக்டர் விற்பனையைத் தொடங்கிய நாட்களில் இருந்து, வருடத்திற்கு 1 லட்சம் டிராக்டர்கள் என்ற எண்ணிக்கையை எட்டி அத்தகைய சாதனையை இந்த ஆண்டு 11 மாதங்களில் செய்துள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *