சென்னை, பிப். 25
தோல் தயாரிப்புகளை வழங்கும் ஸ்ரீலெதர்ஸ் காலணி நிறுவனம் நடத்திய ஆன்லைன் கோலப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் 350க்கு மேற்பட்ட கோலங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இதில் தலைசிறந்த 50 கோல படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. வெற்றிபெற்ற ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு புத்தம்புதிய ஸ்மார்ட்போன் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியானது புரசைவாக்கம் ஸ்ரீலெதர்ஸ் கிளையில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் ஸ்ரீலெதர்ஸ் பங்குதாரர் சுஷாந்தோ டே வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்களுக்கு ரூ. 6 லட்சம் மதிப்பிலான பரிசுகளை வழங்கினார்.
இந்த போட்டி தமிழ் கலை மற்றும் கலாச்சாரம் பெருமையை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு நடைபெற்றது. மார்கழி மாதத்தில் இப்போட்டி நடைபெற்றது. போட்டியாளர்கள் தங்களின் வண்ணமிகு கோல புகைப்படத்தினை பகிர்ந்து கொள்ள தனி வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீலெதர்ஸ் பங்குதாரர் சுஷாந்தோ டே, “கோலம் போட்டிக்கு மாநிலம் முழுவதும் இருந்து பெறப்பட்ட பெரும் வரவேற்பைப் பார்த்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டியை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளோம். போட்டிக்காக அனுப்பப்பட்ட தனித்துவமான அழகிய கோலங்கள் தமிழ் சமுதாயத்தின் கலைநயத்தினை ஆழமாக பிரதிபலிக்கும் விதமாக திகழ்கின்றது என்றார்.”