வாழ்வியல்

நோயை குணப்படுத்தி மீண்டும் வராமல் காக்கும் சித்த மருந்து

உணவே மருந்து, மருந்தே உணவு என்பது சித்த மருத்துவம்.

எனவே தான் பெரும்பாலான சித்த மருந்துகள் உணவாக உட்கொள்ளும் படியே கசாயம், அடை, புட்டு, பொடி, லேகியம், மணப்பாகு, நெய், எண்ணெய் போன்ற வடிவங்களில் காணப் படுகின்றன.

உணவாக பயன்படும் ஒரு பொருளை, குறைந்தளவில் பக்குவப் படுத்தி சாப்பிடும் போது அது மருந் கவும் அதே பொருள் அளவுக்கு மிஞ்சி சாப்பிடும் போது நஞ்சாகவும் மாறிவிடுகிறது. ஒரு பொருளின் உள்ளேயே சத்துகுணம் என்னும் மருத்துவ தன்மையும் ராஜ குணம் என்னும் உணவுத்தன்மையும் தாமச குணம் என்னும் நச்சுத் தன்மையும் நிரம்பியுள்ளது.

ஆகவேதான் அனுபவத்தின்படியும் அறிவியல் கருத்துகளின்படியும் உணவை மருந்தாக மாற்றிக் கொள்கிறோம்.

மருந்து என்பது ஒரு நோயை குணப்படுத்துவதுடன் மீண்டும் வராமல் காக்கும் தன்மையுடனும் அதை உட்கொள்ளும் போது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடாததாகவும் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளும்படியும் இருக்க வேண்டும்.

இதுவே மருந்தின் இலக்கணம்.

ஆனால், நாம் உட்கொள்ளும் பெரும்பாலான மருந்துகள் இவ்வாறு இருப்பதில்லை. கிடைப்பதற்கு அரிதான அல்லது விலை மதிப்புள்ள உணவுகளில் பல்வேறுவகையான ஊட்டச் சத்துகள் நிறைந்துள்ளன.

இவற்றை அன்றாடம் சாப்பிட முடியா விட்டாலும் அவ்வப்போதாவது சாப்பிட்டு வந்தால் பல்வேறு வகையான மருத்துவ பலன்களை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *