வாழ்வியல்

கல்லீரல் நன்றாக இருக்க வேண்டுமா? சிகரெட் – ஆல்கஹால் வேண்டவே வேண்டாம்

மது அருந்துவது கல்லீரலுக்கு மிகவும் கேடானது. எனவே கல்லீரல் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மது அருந்துவதை உடனே நிறுத்த வேண்டும். அதேப்போல் சிகரெட் புகைப்பதையும் கண்டிப்பாக நிறுத்த வேண்டும்.

உடற்பயிற்சி

தினமும் குறைந்தது 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வந்தால் நன்றாக செரிமானம் ஆகும்; நிறைய வியர்க்கவும் செய்யும். இவ்விரண்டும் கல்லீரல் பாதிப்படைவதை வெகுவாகத் தவிர்க்கும். மேலும் வாரத்திற்கு 5 முறையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

ஆப்பிள், காய்கறிகள்

கல்லீரலைக் காப்பாற்ற பசுமையான காய்கறிகளையும் ஆப்பிளையும் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் காய்கறிகள் பித்தநீரை சீராகச் சுரக்க உதவுவதுடன் ஆப்பிளில் உள்ள பெக்டின் செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

ஃப்ளூரைடுக்கு ‘நோ’

ஃபுளூரைடு கலக்காத நீரை தினமும் 12 டம்ளர் வரை அருந்துவது, கல்லீரலுக்கு நல்லது.

அவகேடோ மற்றும் வால்நட்ஸ்

கல்லீரல் நோய்கள் எதுவும் வராமல் இருக்க அவகேடோ மற்றும் வால்நட்ஸ் இரண்டையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனால் அவற்றில் உள்ள குளுடாதியோன் கல்லீரலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *