செய்திகள்

போலீஸிடம் கெஞ்சிய குழந்தை: தந்தையை விடுவித்த ஆதித்யநாத்

பிரயாக்ராஜ், நவ. 15-

பட்டாசு விற்றதால் கைது செய்த போலீஸாரிடம், தந்தையை விட்டுவிடுமாறு, வாகனத்தில் தலையை முட்டிக்கொண்டு கெஞ்சிய சிறுமி குறித்து அறிந்த யோகி ஆதித்யநாத், சிறுமியின் தந்தையை விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாகக் காற்றின் தரம் மோசமாக இருக்கும் பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது. டெல்லி, கர்நாடகா, ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதைப் பார்த்த கைது செய்யப்பட்டவரின் பெண் குழந்தை வாகனத்தின் முன் நின்று தந்தையை விடுவிக்குமாறு போலீஸாரிடம் கெஞ்சியுள்ளது. இதற்கு போலீஸார் மறுக்கவே வாகனத்தில் தன் தலையை முட்டிக்கொண்டு அக்குழந்தை அழும் காட்சி இணையதளங்களில் வெளியானது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவவே, யோகி ஆதித்யநாத் கவனத்துக்கும் சென்றுள்ளது. இதையடுத்து உடனடியாக குழந்தையின் தந்தையை விடுவிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, போலீஸார் குழந்தையின் தந்தையை விடுவித்து வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். அதோடு குழந்தைக்குப் பரிசுப் பொருட்களும், இனிப்புகளும் வாங்கி சென்று கொடுத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை புலந்த்சார் குர்ஜா காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் குமா சிங் உறுதி செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *