செய்திகள்

சென்ட்ரல் , எழும்பூர் ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

தீபாவளிக் கூட்ட நெரிசல்

சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

சென்னை , நவ . 12

தீபாவளிக் கூட்ட நெரிசலில் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாமல் தவிர்ப்பதற்காக சென்டிரல் , எழும்பூர் ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு தினசரி 11 ரெயில்கள் வந்து செல்கின்றன.

சென்னை அரக்கோணம் கும்மிடிப்பூண்டி இடையே 32 ரெயில்கள் போய் வருகின்றன. இந்த ரெயில் நிலையங்களில் தீபாவளிக் கூட்ட நெரிசலில் திருட்டு, செயின் பறிப்பு நடந்து நடந்து விடாமல் தவிர்ப்பதற்காக சென்டிரல் போலீஸ்

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல எழும்பூர் ரெயில் நிலையங்களில் 36 மின்சார ரெயில் சேவை நடத்தப்படுகிறது. அங்கும் தீபாவளிக் கூட்ட நெரிசலில் திருட்டு, செயின் பறிப்பு நடந்து விடாமல் தவிர்ப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில்வே போலீஸ் டி.எஸ்.பி.முருகன் தலைமையில் 200 போலீசாரும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *