செய்திகள்

ஸ்டேட் வங்கி கடன் அட்டைதாரர்கள் பிரிஜ், வாஷிங்மிஷின், ஏ.சி., கம்ப்யூட்டர் சாதனங்கள் 18 மாத தவணையில் வாங்கலாம்

Spread the love

சென்னை, அக்.12

பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக் காலத்தில் மிக குறைந்த செலவில் அதி உன்னதமான, பொருட்கள் வாங்கும் அனுபவத்தைத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் கடன் அட்டை சம மாதத் தவணை தொகை வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த சேவையின் மூலம் நுகர்வோர் 6 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான சம மாதத் தவணைத் தொகை வாய்ப்புகளைத் தேர்வு செய்து பயன் பெறலாம். நுகர்வோர், இந்தியா முழுவதும் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட நகரங்களில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்களிடம் இருந்து பைன் லேப்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் கொண்ட விற்பனை முனையக் கருவி எனப்படும் பிஓஎஸ் கருவிகளின் வாயிலாக பணம் செலுத்து இந்த சலுகையுடன் பொருட்களை வாங்கலாம்.

இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார், முழுத் தொகையையும் உடனடியாகச் செலுத்தத் தேவை இல்லை. வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் திருப்தி என்பதை நோக்கியே தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். தடையற்ற வாங்கும் அனுபவம் மற்றும் காகித நடைமுறையற்ற கடன் பெறும் வசதி இது. மற்றுமொரு முன்னேற்றப்படி என்ற வகையில் இந்த சேவையை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்றார்.

ஆவண சரிபார்ப்பு இல்லாத தன்மை, செயல்முறைக் கட்டணங்கள் ஏதும் இல்லை, வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை, உடனடி கடன் வழங்குதல், குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பிராண்ட் பொருட்களுக்கு இஎம்ஐ (சமமான மாதத் தவணைக் கட்டணம்) கட்டணம் ஏதும் இல்லை என்பன போன்ற பல முக்கிய சலுகைகளை இந்த வசதியின் மூலம் நுகர்வோர் அனுபவிக்க முடியும். சமமாதத் தவணை முறை பொருட்களை வாங்கி, பரிமாற்றம் செய்யப்பட்ட ஒரு மாதம் நிறைவடைந்த பின்னர் தொடங்கி நடைமுறைக்கு வரும்.

இதற்குத் தகுதி பெற்றுள்ளோமா என்பது குறித்து வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள, தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி (மொபைல் போன்) எண்ணில் இருந்து DCEMI டைப் செய்து 567676 எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *