செய்திகள்

பெங்களூருவிலிருந்து கடலூர் வந்த காரில் ரூ. 51 லட்சம்: தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல்

கடலூர், மார்ச் 2–

பெங்களூருவிலிருந்து கடலூர் வந்த காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி அதில் இருந்த ரூ. 51 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

ராம்நாத் பிரசாத் என்பவர் பெங்களூருவிலிருந்து புதுச்சேரி வழியாக இன்று காலை கடலூருக்கு காரில் வந்து கொண்டிருந்தார். ரெட்டி சாவடி காவல்நிலையம் அருகே கடலூர் மாவட்ட தேர்தல் பறக்கும்படை தலைமை அதிகாரி கலாவதி தலைமையிலான குழுவினர் அந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த காரில் கட்டுக்கட்டாக ரூ. 51 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. சிப்காட்டில் உள்ள தனது தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே இந்த பணத்தை எடுத்துச் செல்வதாக ராம்பிரசாத் தெரிவித்தார்.

இந்த பணத்திற்கான ஆவணம் எதுவும் இல்லாததால் அந்த பணத்தை வட்டாட்சியர் பலராமனிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *