செய்திகள்

கரூர் அருகே ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.29 லட்சம் பறிமுதல்

கரூர், மார்ச் 3–

கரூர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6–ந்தேதி நடைபெற உள்ளது. மே 2–ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரூர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிகாரி எம்.முருகன் தலைமையில் க.பரமத்தி நொய்யல் சாலையில் முன்னூர் என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு வாகன தணிக்கை நடைபெற்றது.

அப்போது, தென்னிலையைச் சேர்ந்த வடிவேல் மற்றும் 3 பேர் காரில் வந்துள்ளனர். காரை சோதனையிட்டபோது, அதில், 2 லட்சத்து 29 ஆயிரத்து 300 ரூபாய் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த தொகை பறிமுதல் செய்யப்பட்டு அரவக்குறிச்சி சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *