செய்திகள்

சென்னை புதுக் கல்லூரியில் ‘ரிசர்ச் டே’ விழா

மதுரை, மார். 1–

சென்னை புதுக் கல்லூரியில் “ரிசர்ச் டே” கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு புதுக் கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் சேக் முகம்மது தலைமை வகித்தார். செயிண்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழக முதல்வர் ஆராய்ச்சி முனைவர் குணசேகரன், சென்னை கிறித்துவ கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் டேவிட் பிரபாகர் மற்றும் சென்னை லயோலா கல்லூரி பொருளியல் துறை துணைப் பேராசிரியர் முனைவர் மாரியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினரர்களாக அழைக்கப்பட்டனர்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆராய்ச்சியின் பங்களிப்பை பற்றி அவர்கள் பேசினர். அதன் தொடர்ச்சியாக புதுக் கல்லூரியின் முதல்வர் ஆராய்ச்சி முனைவர் குலாம் முகம்மது 2019–-2020ஆம் ஆண்டிற்கான ரிசர்ச் டே அறிக்கையை தாக்கல் செய்தார்.

இவ்விழாவிற்கு சென்னை புதுக் கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் அஸ்ரார் செரிப் வரவேற்புரை வழங்கினார். புதுக் கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் சேக் முகம்மது தலைமையுரை ஆற்றினார். விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் சபூர் நன்றியுரையும் முனைவர் சையது முகமது முஜாகீர் முனைவர் அப்துல் ஜமால் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

இந்த விழாவில் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மணைவ மாணவிகள், முதுகலை மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *