செய்திகள்

பொன்னேரியில் ஓவியம், கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

பொன்னேரி, மார்ச் 3–

பொன்னேரி தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஒளவை கிராம நல சங்கம் கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி மாணவர்கள் வீட்டில் முடங்கி இருந்தபோது அவர்களுக்கு கொரோனா தடுப்பு பற்றிய விழிப்புணர்வுக்காகவும் , மனதளவில் ஒரு சிறு உற்சாகம் ஏற்படுத்தவும் திருவள்ளூர் மாவட்ட கல்வி துறை, டெட்டால் பனேகா ஸ்வச் இந்தியா என்னும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் ஓவியம், கட்டுரை கவிதை முதலியவற்றில் போட்டிகள் நடத்தியது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் 822 பேர் இந்த போட்டிகளில் பங்கேற்றனர் . இதில் வகுப்பு வாரியாக முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளில் மொத்தம் 40 மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கபட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றி செல்வி, கலக்டிவ் குட் பவுண்டேஷன் நிர்வாகி வைத்தியநாதன் ஆகியோர் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி உதவி திட்ட அலுவலர் நந்தகுமார் , திருவள்ளூர் கல்வி மாவட்ட அலுவலர் சாந்தி, முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளர் பூபால முருகன், சுகாதார இணை இயக்குனர் ராணி ஓளவை கிராம நல சங்க இயக்குனர் கிருஷ்ணக்குமார் கலக்டிவ் குட் பவுண்டேஷன் ஆந்திர மாநில மேலாளர் அர்ஜூன் பிரசாத , கௌடி உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் ஸ்டான்லி தேவ பிரியம், ஓளவை கிராம நல சங்க மேலாளர் ரவிக்குமார் மற்றும் மாணவ மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் ஓளவை கிராம நல சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *