செய்திகள்

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம்: சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு

Spread the love

சென்னை, பிப்.25-

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், 5 பேர் பணியிட மாறுதல் மூலம் வேறு கல்லூரிகளில் முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். மற்ற 6 பேரும் பேராசிரியர்களாக இருந்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இந்த பணியிட மாறுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்தில் புதிதாக அமையவுள்ள 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதலோடு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

பணியிட மாற்றம் செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர்களின் விவரம்:–

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.சாந்திமலர், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி முதல்வராகவும், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் பி.பாலாஜி, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி முதல்வராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஆர்.முருகேசன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் சிறப்பு அதிகாரியாகவும், திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் சிறப்பு அதிகாரியாக இருந்த டாக்டர் ஏ.நிர்மலா, கோவை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த டாக்டர் எச்.முத்துகிருஷ்ணன், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் சிறப்பு அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.பதவி உயர்வு பெற்று முதல்வராக நியமிக்கப்பட்டவர்களின் விவரம்:– (பழைய பதவி அடைப்பு குறிக்குள்)

டாக்டர் கே.சாந்தா அருள்மொழி – நாமக்கல் மருத்துவக் கல்லூரி முதல்வர் (பேராசிரியர், மயக்கவியல் துறை, கோவை மருத்துவக் கல்லூரி) .

டாக்டர் அரசி ஸ்ரீவத்சன் – திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் (பேராசிரியர், பெண்கள் நலன் மற்றும் மகப்பேறியல் துறை சென்னை மருத்துவக் கல்லூரி).

டாக்டர் வள்ளி சத்தியமூர்த்தி – திருப்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் (பேராசிரியர், மயக்கவியல் துறை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி).

டாக்டர் ஆர்.முத்துச்செல்வன் – கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி முதல்வர் (பேராசிரியர், பொது மருத்துவத் துறை, சென்னை மருத்துவக் கல்லூரி).

டாக்டர் சி.ரேவதி – விருதுநகர் மருத்துவக் கல்லூரி முதல்வர் (பேராசிரியர், நுண் உயிரியல் துறை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி).

டாக்டர் வி.விஸ்வநாதன் – நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி முதல்வர் (பேராசிரியர், கதிரியக்க சிகிச்சைத் துறை, சென்னை மருத்துவக் கல்லூரி).

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *