செய்திகள்

விழுப்புரத்தில் காவல்துறை கொடி அணிவகுப்பு: கலெக்டர் அண்ணாதுரை பங்கேற்பு

விழுப்புரம், மார்ச் 3–

ஜனநாயக முறைப்படி வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழுப்புரத்தில் காவல்துறை கொடி அணிவகுப்பு கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2021 முன்னிட்டு பொதுமக்களுக்கு அச்சமின்றி ஜனநாயக முறைப்படி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மத்திய காவல் படையினர் மற்றும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை தெரியப்படுத்தும் விதமாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட இரயில் நிலையத்தில் தொடங்கி திரு.வி.க சாலை மற்றும் எம்.ஜி.ரோடு வழியாக பழைய பேருந்துநிலையம் வரை சென்றடைந்த இந்த பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், மத்திய எல்லைப்பாதுகாப்புபடை உதவி கமாண்டர் ரஜ்பீர் சிங், காவல் துணை கண்காணிப்பாளர் நல்லசிவம் மற்றும் மத்திய காவல் படையினர், மாவட்ட காவல்துறையினர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *