செய்திகள்

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி

விருதுநகர், பிப். 23–

பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி நாளை முதல் 27ஆம் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல 4 நாளுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

4 நாட்கள் அனுமதி

இந்த நிலையில் 24 ந்தேதி பிரதோஷம் மற்றும் 27 ந்தேதி பவுர்ணமி ஆகிய நாட்களையொட்டி 24 ந் தேதி முதல் 27 ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கோயிலுக்குச் செல்லலாம்.

கொரோனா நோய் தொற்று காரணமாக முழு பரிசோதனைக்குப் பின்னரே கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் மலைப்பாதை வழியாக மட்டுமே கோயிலுக்குச் செல்ல வேண்டும். மேலும், கோயில் வளாகத்தில் இரவில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *