வாழ்வியல்

வாதம் பித்தம் நீக்கும்; பசியை தூண்டும்: நுரையீரல் , தொண்டை பாதிப்புகளைக் குணப்படுத்தும் பனங்கற்கண்டு

பனங்கற்கண்டு வாதம் பித்தம் நீக்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள்.

முற்றிலும் சுத்தப்படுத்தாத கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தினால் ‘பனங்கற்கண்டு’ எனப்படும்.

இதற்கு பல மருத்துவ குணங்கள் உள்ளன.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும்.

பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *