சமீபமாக நாடெங்கும் கொரோனா வைரஸ் தொற்று நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கும் குறைவாகவே பாதிப்பு இருப்பதால் நாம் இறுக்கமாக போட்டிருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்தி விடக்கூடாது.
எங்கேனும் மீண்டும் தொற்றுப் பரவல் காட்டுத் தீ போல் பரவும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது.
இந்த நிலையில் சென்னைக்கு வந்த ஒரு விமான பயணிக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது. நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அந்த பயணியை தனிமைப்படுத்தி விட்டார்.
கூடவே இதர பயணிகள் எல்லாம் சோதிக்கப்பட்டு தொற்று இல்லை என்பதை உறுதி செய்துள்ளார். ஆனாலும் அவர்களை சில நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.
பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வைரஸ் பரவலை தடுக்க பிரிட்டன் உடனான தரை, கடல், வான் வழி போக்குவரத்தை உலக நாடுகள் ரத்து செய்துள்ளன.
பிரிட்டனில் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளும் ஆய்வு நடத்தினர். அப்போது பிரிட்டனில் கொரோனா வைரஸின் மரபணு மாற்றமாகி புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது அதிவேகமாகப் பரவினாலும் உயிரிழப்பு அதிகமாக இல்லை.
இந்த புதிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது. கரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் பரவும் புதிய வகை வைரஸ், இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக, புதிய வைரஸ் பரவுவதை தடுக்க பிரிட்டன் உடனான பேருந்து, ரயில், கப்பல், விமான போக்குவரத்தை ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகள் ரத்து செய்து வருகின்றன.
இந்தியாவும் போக்குவரத்தை ரத்து செய்துள்ளது.
தமிழர்கள் நலன் காப்பதில் அண்ணா தி.மு.க. அரசு என்றும் முன்னிலை வகிப்பதை நாடே அறியும். முன்பு எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது சென்னை மிகப்பெரிய புயல் மழையால் பெரும் சேதத்தை சந்தித்த போது எம்ஜிஆர் தனது ராமாவரம் தோட்ட இல்லத்தில் நுழைய கூட வழியின்றி அப்போதைய மவுண்ட் ரோட்டில் ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தனது அமைச்சர்களையும் அதிகாரிகளையும் மக்கள் பணி செய்ய ஆணை பிறப்பித்து விட்டு இருந்து விடவில்லை! தானே களப்பணிகளை ஆய்வு செய்ய முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி களப்பணிகளை துரிதப்படுத்தினார். ஏழை மக்களின் துயரை புரிந்து கொண்டு உடனே நிவாரணங்கள் சென்றடைய செய்தார்.
அவர் வழியில் ஆட்சி புரிந்த ஜெயலலிதா தமிழக கடற்கரையை ‘ சுனாமி ‘ தாக்கியபோது நாடே என்ன நடக்கிறது? என்பதை புரிந்து கொள்ளக் கூட முடியாமல் தவித்த நேரத்திலேயே ராணுவ ஹெலிகாப்டரை வரவழைத்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஏற்பட்ட சேதாரத்தை ஆய்வு செய்தார்.
அன்று மாலையே பாதிப்படைந்தோருக்கு நிவாரணங்கள் வழங்கினார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டிய வழியில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அண்ணாதிமுக அரசு எல்லோராலும் பாராட்டப்படும் வகையில் மக்கள் நலன் காக்கும் கேடயமாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக கடந்த 10 மாதங்களாக கொரோனா பெரும் தொற்றை சமாளிக்க எடுத்து வரும் போர்க்கால நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதாகும்.
அந்த வகையில் தற்போது பிரிட்டனில் இருந்து புயலாக புறப்பட்டு வந்திருக்கும் கொரோனா பரவலை எதிர்த்து தமிழகத்தை பாதுகாக்க அரண் அமைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் மக்களிடம் ‘ இனியும் அச்சம் தேவையில்லை ‘ என்ற மனநிலையோடு முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருவதும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பதும் அதிகரித்து வரும் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் இளைஞர்கள் மகிழ்ச்சி பொங்க புத்தாண்டு பிறப்பை கொண்டாட துடித்துக் கொண்டிருக்கின்றனர்.
கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கடற்கரைகள், சாலைகளில் டிசம்பர் 31–ந் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஜனவரி 1–ம் தேதியும் கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று மெல்ல கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் தோற்றம் பரவல் கட்டுப்பாடின்றி பறவை கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் தமிழகம் மிக கட்டுப்பாடுடன் கடமையாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் முதல்வர் பழனிசாமி ‘ மக்களின் நலனே முக்கியம்’ என்பதை உணர்ந்து இளைஞர்களின் எரிச்சல் பற்றி கவலையின்றி அனைவரின் நலன் மீது அக்கறை கொண்ட இப்படி ஓர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.