வர்த்தகம்

காது கேளாமை குறைப்பாடுக்கு 3–ந் தேதி ஆன்லைன் ஆலோசனை: வேந்தர் வெங்கடாச்சலம் ஏற்பாடு

ராமச்சந்திரா மருத்துவமனையில்

காது கேளாமை குறைப்பாடுக்கு 3–ந் தேதி ஆன்லைன் ஆலோசனை:

வேந்தர் வெங்கடாச்சலம் ஏற்பாடு

சென்னை, மார்ச் 1

உலக காது கேளாமை தினத்தையொட்டி பொது மக்களுக்கு காது கேளாமை குறைபாடு பற்றிய எந்த பாதிப்பு இருந்தாலும் யுடியூப் மூலம் ஆன்லைனில் சந்தேக கேள்விகளை கேட்டு, இலவச ஆலோசனை பெற போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இதன் வேந்தர் வெங்கடாச்சலம், சேர்மன் செங்குட்டுவன் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் மார்ச் 3 ந் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை காது ஒலி நிபுணர்கள், டாக்டர்கள் ஹேரம்ப கணபதி, முத்து செல்வி ஆகியோர் பொது மக்களின் சந்தேக கேள்விகளுக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.

இந்த கேள்விகளை நேரடியாக 9940184280 என்ற எண்ணில் கேட்கலாம். யுடியூபில் ஆன்லைன் தளத்திலும் இணைத்தும் கேள்வி கேட்கலாம். குழந்தைகளுக்கு காது கேளாமை, முதியோர், வயதானவர் காது பிரச்சினை, நவீன காக்ளியர் டிஜிட்டல் காது கேட்பு சாதனம் போன்ற நவீன தொழில் நுட்ப வசதிகள் பற்றியும் கேட்டு அறியலாம்.

வாட்ஸ் அப் மூலம் வீடியோ ஆலோசனையை மார்ச் 4 ந் தேதி காலை 8.30 மணி முதல் 3.30 மணி வரை கேட்கலாம். 044 459285000 எக்ஸ்டென்சன் 8006 என்ற எண்ணில் தங்கள் பெயரைப் பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *