செய்திகள்

பண்ணைப் பசுமை கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.30க்கு விற்பனை

Spread the love

சென்னை, நவ. 9–

பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் இன்று முதல் குறைந்த விலையில் கிலோ ரூ.30 மற்றும் ரூ.40க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, இரா.காமராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

வெங்காய விளைச்சல் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளிச்சந்தையில் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, நுகர்வோருக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்திட முதலமைச்சர் உத்தரவிட்டதனைத் தொடர்ந்து, 4–ந்தேதி மற்றும் 6–ந்தேதிகளில் கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் மூலம் தரமான வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, நுகர்வோர் பயன்பெறும் வகையில், வெளிச்சந்தை விலையை விட குறைவாக, ஒரு கிலோ ரூ.30 மற்றும் ரூ.40க்கு தமிழ்நாட்டில் செயல்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக இன்று முதல் விற்பனை செய்யப்படும்.

அரசின் இந்நடவடிக்கையினால் வெங்காயத்தின் விலை உயர்வானது கட்டுக்குள் கொண்டு வரப்படும் என அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, இரா.காமராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *