வாழ்வியல்

சுற்றுச்சூழலை பாதிக்காத இயற்கை முறை சாயம்!

Spread the love

உலக தொழிற்சாலை மாசுபாட்டில் ஐந்தில் ஒரு பங்கு, ஜவுளி ஆலைகளால் ஏற்படுகிறது. உலகெங்கும் சாயமிடுவதற்கு, 20 ஆயிரம் வேதிப் பொருட்களுக்கு மேல் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், துணிகளுக்குப் போடும் இயற்கைச் சாயங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது, பிரான்சைச் சேர்ந்த, ‘பிலி’ நிறுவனம். இந்த நிறுவனத்தின் நோக்கம், சுற்றுச்சூழலுக்கு கேடு தராமல், அதே வேளையில் டன் கணக்கில், குறைந்த விலையில் பல துணிச் சாயங்களை உற்பத்தி செய்வது.

இதற்கு காட்டமான வேதிப் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்களை நாடாமல், நுண்ணுயிரிகள் மூலம், இயற்கை இடு பொருட்களை நொதிக்கச் செய்யும் முறையை, பிலியின் நிறுவனர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஏற்கனவே, சாயத்திற்கு பயன்படும் மஞ்சள் போன்ற தாவரங்களின் அடிப்படையிலான பொருட்களை, நுண்ணுயிரிகள் நிறைந்த கலனில் நொதிக்க வைத்து, சிதைந்து கிடைக்கும் திரவத்தை சாயமாக பயன்படுத்தலாம் என, பிலியின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த இயற்கை நொதிச் சாயங்களை பெரிய அளவில் தயாரிப்பதற்கான வெள்ளோட்டத்தை, தற்போது பிலியின் விஞ்ஞானிகள் நடத்தி வருகின்றனர். அடுத்த இரு ஆண்டுகளில் வர்த்தக ரீதியில் தங்கள் சாயங்கள் சந்தைக்கு வரும் என, பிலியின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பிலியின் இந்த முயற்சிக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *