சினிமா

அதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா

சமீபத்தில் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பான “ “வானம் கொட்டட்டும்“ படத்தில் இரட்டை வேடத்தில் அனைவரையும் கவரும் நடிப்பை தந்திருப்பவர் நந்தா. அதர்வா முரளி நடிப்பில் உருவாகும் போலீஸ் திரில்லர் படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார் நந்தா.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். புகழ்மிகு இயக்குநர்களான பூபதி பாண்டியன், சுசீந்திரன், கொரட்டால சிவா ஆகியோரிடம் பணியாற்றியவர் இவர். இப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க, லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார், நந்தா வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சில முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை கலை செய்ய, சரவணன் சண்டை பயிற்சி இயக்கம் செய்கிறார். கலை இயக்குநராக ஐயப்பன் பணியாற்றுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *