செய்திகள்

இளைஞருக்கு பிரதமர் மோடி கொடுத்த புத்தாண்டு பரிசு

Spread the love

சென்னை, ஜன. 2–

புத்தாண்டு பரிசாகத் தனது டுவிட்டர் பக்கத்தை பின் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட இளைஞரின் டுவிட்டர் கணக்கைப் பிரதமர் மோடி பின் தொடர்ந்துள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் மோடியை 52 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர். சில முக்கியத் தலைவர்கள், உலகத் தலைவர்கள் எனப் பிரதமர் மோடி 2,381 பேரை பின் தொடருகிறார். இந்நிலையில் மோடியின் டுவிட்டர் பக்கத்தை டேக் செய்து, டிசம்பர் 31ஆம் தேதி அங்கிட் துபே என்ற இளைஞர் பிரதமரிடம் புத்தாண்டு பரிசு கேட்டுள்ளார்.

அந்த டுவிட்டர் பதிவில் அங்கிட் துபே, “மதிப்பிற்குரிய பிரதமருக்கு, நான் உங்களுடைய தீவிர ரசிகர். புத்தாண்டு பரிசாக உங்களிடம் ஒன்று கேட்கிறேன். தருவீர்களா? என்னுடைய டுவிட்டர் கணக்கை உங்களால் பின் தொடர முடியுமா? ப்ளீஸ் சார்” என்று கேட்டுள்ளார்.

இதனையடுத்து அவரை பின் தொடர்ந்த பிரதமர் மோடி, அங்கிட் துபேவுக்கு பதில் அளித்துள்ளார். அதில், ”பின் தொடர்ந்துவிட்டேன். இந்த ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, “பிரதமர் மோடி தன்னை பின் தொடர்வது புத்தாண்டின் சிறந்த பரிசு. பிரதமருக்கு நன்றி” என்று அங்கிட் துபே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிரதமர் மோடி மீம்களை வரவேற்பதாகத் தெரிவித்து, இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *