செய்திகள்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

சென்னை, மார்ச் 5–

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கியது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கும், 2 கோடி முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி, முன்னுரிமை அடிப்படையில் போடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 2வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கும், நாள்பட்ட நோய்களுடன் போராடுகிற 45 வயதுக்கும் மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் 1-ந் தேதி தொடங்கி இருக்கிறது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், டாக்டர் ஹர்ஷ்வர்தன், நிர்மலா சீதாராமன், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, தமிழக கவர்னர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கேரளா, கோவா, பீகார், ஒடிசா, டெல்லி முதலமைச்சர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள்.

இந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *