செய்திகள்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு நவீன வங்கி கட்டிடம்

திருப்பத்தூர், பிப். 16–

திருப்பத்தூர் மாவட்டம் பச்சூரில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நவீன வங்கி கட்டிட அலுவலகத்தினை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்து சங்க லாபத்திலிருந்து 14 சதவிகித பங்கு ஈவுத் தொகையை 600 சங்க உறுப்பினர்களுக்கு வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அம்மாவின் நல்லாசியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சார்பில் உலகத்திலேயே எங்குமில்லாத வகையில் கூட்டுறவு கடன் சங்களில் ரூ.12,110 கோடி மதிப்பீட்டில் 16.43 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் தொகுதியில் 11 தொடங்க வேளர்ணமை கூட்டுறவு சங்கங்களில் ரூ.5437.84 லட்சம் மதிப்பில் 7914 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி, ஜோலார்பேட்டை தொகுதியில் 13 தொடங்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ரூ.3684.22 லட்சம் மதிப்பில் 5307 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி, வாணியம்பாடி தொகுதியில் 20 தொடங்க வேளர்ணமை கூட்டுறவு சங்கங்களில் ரூ.6339.50 லட்சம் மதிப்பில் 9496 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் ஆம்புர் தொகுதியில் 17 தொடங்க வேளர்ணமை கூட்டுறவு சங்கங்களில் ரூ.4661.49 லட்சம் மதிப்பில் 6444 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி என மொத்தம் 61 தொடங்க வேளர்ணமை கூட்டுறவு சங்கங்களில் ரூ.20,123.05 லட்சம் மதிப்பில் 29,161 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் பச்சூர் தொடங்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் ரூ.411 லட்சம் மதிப்பில் 587 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அம்மாவின் அரசு மக்களுக்கு தேவை என்ன என்பதை கண்டறிந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இவ்விழாவில் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் முனிராஜீ, கல்விக்குழு தலைவர் எஸ்.ரமேஷ், தொடங்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர்கள் வேலு, சீனிவாசன், துணை தலைவர்கள் தங்கராஜ், தர்மேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் எம்.கே.ராஜா, ஆர்.ரமேஷ், கே.எஸ்.அழகிரி, செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *