செய்திகள்

விழுப்புரத்தில் ரூ.2.58 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

விழுப்புரம், நவ.21

விழுப்புரத்தில் ரூ2.58 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) செயற்பொறியாளர் ஜவகர், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் அம்புரோஸியாநேவிஸ்மேரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊராட்சி அளவிலான 10 குழு கூட்டமைப்புகளுக்கு பெருங்கடன் நலத்திட்ட உதவிக்கான ரூ.197.95 லட்சம் மதிப்பிலான காசோலையையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பொது நிதி திட்டத்தின் கீழ் செவித்திறன் குறைபாடுடைய 15 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.4,920 வீதம் மொத்தம் ரூ.78,800 மதிப்பில் நவீன காதொலி கருவிகளையும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 4 குடும்ப வாரிசுதாரர்களுக்கு ரூ.7 லட்சத்திற்கான காசோலையையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.4,120 மதிப்பில் இலவச தையல் எந்திரம் என மொத்தம் ரூ.2 கோடியே 58 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் விழுப்புரம் கோட்டாட் சியர் ராஜேந்திரன், தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், அண்ணா தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பேட்டை முருகன், சுரேஷ்பாபு, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்தி வேல், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் குமரன், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் வக்கீல் செந்தில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், நகர ஜெயலலிதா பேரவை நிர்வாகி கோல்டு சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *