செய்திகள்

தினக்கூலி பணியாளர்களாக 127 டிரைவர், கண்டக்டர்கள்: பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

சென்னை, பிப்.14–

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருவண்ணாமலை மண்டலத்தில் சேம பணியாளர்களாக பணிபுரிந்து வரும் 127 ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தினக்கூலி பணியாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டதற்கான ஆணையை இந்து சமயம் மற்றும் அறநியைலத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருவண்ணாமலை மண்டலத்தில் சேம பணியாளர்களாக பணிபுரிந்து வரும் 106 ஓட்டுநர்கள், 21 நடத்துனர்கள் தினக்கூலி பணியாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டதற்கான ஆணை மற்றும் வருவாய்த் துறை மூலமாக 43 முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி, கணவரால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 பெறுவதற்கான அனுமதி ஆணைகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், செய்யார் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன், வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் இல.மைதிலி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருவண்ணாமலை மண்டல பொது மேலாளர் சி.கே.ராகவன், ஆரணி பணிமனை மேலாளர் வெங்கடேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. அரங்நாதன், திருவண்ணாமலை மாவட்ட ஆவின் துணைபெருந்தலைவர் பாரி பி.பாபு,

மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் எஸ்.ஜோதிலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜீ.சேகர், அரையாளம் எம்.வேலு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், மேற்குஆரணி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், கவுன்சிலர் எ.கோவிந்தராஜன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி உதயசங்கர், மெய்யூர் ஜெயசீலன், கே.எஸ்.சிவக்குமார், இ.பி. நகர். குமார், பையூர் ஆர்.சதீஷ்குமார், ஒன்றிய பிரதிநிதி புலவன்பாடி ஆர். சுரேஷ்ராஜா, அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *