வாழ்வியல்

பொங்கலில் அடங்கியுள்ள பல மருத்துவ நன்மைகள்!

Spread the love

தமிழ் நாட்டின் முதன்மையான உணவு என்றால் அது அரிசி தான். பொங்கல், உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் பாடுபட்ட உழவர்கள், கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவே நாம் அரிசியை பொங்கல் வைத்து பொங்கல் திருவிழாவாக கொண்டாடுகின்றோம்.

பொங்கலில் பலவிதங்கள் உண்டு. வெல்லம் சேர்த்த பொங்கல், மிளகு சேர்த்த பொங்கல், எதையும் கலக்காத வெண்பொங்கல் போன்று பலவிதங்கள் உண்டு. இவை எல்லாவற்றிலும் ஒரு தனி சிறப்பு உண்டு.

சர்க்கரைப் பொங்கல்

ஊர்ப்புறங்களை காட்டிலும், நகர பகுதியில் இந்த வகை பொங்கலை செய்து இயற்கைக்கு படைப்பதுண்டு. இவற்றில், அரிசி, வெல்லம், பருப்பு வகைகள், சேர்ப்பதால் இனிப்பாக இருக்கும். எனவே, இது சர்க்கரை பொங்கல் என்கிற பெயர் பெற்று விட்டது. இதில் புரதசத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து அதிகம் நிறைந்துள்ளது என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மிளகு பொங்கல்

பொதுவாக, பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த மிளகு பொங்கலை தாராளமாக சாப்பிடலாம். இதற்கு காரணம் இதில் சேர்த்துள்ள அரிசி, மிளகு, இஞ்சி, பருப்பு, ஆகியவை தான்.

தூய பொங்கல்

பலருக்கு வெண்பொங்கல் என்றால் கொள்ளை பிரியம். இந்த வகை பொங்கல் தான் ஊரகப் பகுதிகளில் பெரும்பாலும் வைப்பதுண்டு. இதில் அரிசி, பால் போன்றவற்றை சேர்ப்பதால், இதன் சுவை தனித்துவம் பெற்றதாக இருக்கும்.

மேற்சொன்ன பொங்கல் வகைகள் அனைத்திலும் பலவித நன்மைகள் உள்ளன. இந்த வகை உணவுகளில், கொலஸ்ட்ரால் இருப்பதில்லை. ஆதலால் உடல் எடை பிரச்சினை இருக்காது. மேலும், இது ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகும்.

பொங்கலில், நம் நினைப்பதை விட ஏராளமான சத்துக்கள் உள்ளது என உணவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக புரதச்சத்து, வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், தாதுக்கள், பச்சையம், நொதிகள் போன்றவை உள்ளன. தென்னிந்திய உணவுகளில் முதன்மையான இடத்தில் இருப்பதற்கு காரணம் இதுவே.

எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பொங்கல் அருமருந்தாக இருக்கும். காரணம் இந்த உணவில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் தான். தசைகளில் ஏற்பட கூடிய சோர்வை குறைக்கவும், வலியையும் நீக்கவும் இந்த உணவு உதவுகிறது.

மற்ற உணவை போன்று பொங்கலை பார்த்து நாம் பயப்பட தேவையில்லை. ஏனெனில், இதில் அவ்வளவு சத்துக்கள் ஒளிந்துள்ளன. குறிப்பாக இதில் நார்சத்து அதிகம் உள்ளதால், மிக சுலபமாக செரிமானம் அடைந்து விடும். மேலும், இந்த உணவில் கொலஸ்ட்ராலும் கிடையாது என்பதால், கரும்போடு பொங்கலை சாப்பிட்டு மகிழ்ச்சியான “தை திருநாளை” கொண்டாடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *