சென்னை, மார்ச் 6
உணவுகளோடு ஊட்டச்சத்துக்களை சேர்க்க, நியூசக்தி வீட்டில் சமைக்கப்படுகின்ற வழக்கமான உணவுகளில் நுண் ஊட்டச் சத்துக்களின் அளவை அதிகரிக்கிறது. நுகர்வோர்களின் தினசரி உணவுகளின் சுவை, வாசனை மற்றும் தோற்றத்தை மாற்றாமல் கூடுதல் ஆரோக்கியமான மற்றும் அதிக சமச்சீரான உணவுகளை உட்கொள்ளவும் அல்லது அவர்களது வழக்கமான உணவு முறை பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளவும் இது நுகர்வோர்களுக்கு உதவுகிறது. அரிசிக்கான பவர்மிக்ஸ் (வழக்கமான அரிசியுடன் சேர்க்கப்படுகின்ற வலுவூட்டப்பட்ட உமி நீக்கிய அரிசி), கோதுமை மாவுக்கான பவர்மிக்ஸ் (வழக்கமான கோதுமை மாவுடன் கலக்கப்படுகின்ற வலுவூட்டி) மற்றும் மிக்ஸ்மீ மூன்று சுவைகளில் கிடைக்கின்ற வலுவூட்டப்பட்ட பவுடர் வடிவிலான பிவரேஜ் மிக்ஸ் ஆகியவை நியூசக்தி தயாரிப்பு அணி வரிசையில் இடம் பெற்றுள்ளன.
15 முதல் 49 வயதிற்குட்பட்ட பெண்களில் பாதி பேர் தற்போது ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரேநாளில் நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கி விட முடியாது என்பதால், நாம் வழக்கமாக உணவுகளைப் பயன்படுத்தும் அரிசி மற்றும் கோதுமை மாவு போன்ற தானியங்களை ஊட்டச்சத்தின் மூலம் செறிவூட்ட நியூசக்தி பயன்படுகிறது.
டி.எஸ்.எம். நிறுவனத்தின் பிசினஸ் இயக்குனர் அமித் போஸ் இதுகுறித்து கூறியதாவது:
“வைட்டமின்கள் மற்றும் தாதுச் சத்துக்கள் என்ற நுண் ஊட்டச்சத்துக்கள், சமச்சீரான உணவின் ஒரு அத்தியாவசிய அம்சமாக இருக்கின்றன என்பதையும் இதன் மூலம் நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்க இவைகள் உதவுகின்றன என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். அனைவருக்கும் நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கும் ஊட்ட சத்துக்களை வழங்குவதற்கெனவே உருவாக்கப்பட்ட ஒருபிராண்டாக, இந்தியர்களின் ஊட்டச்சத்து இடைவெளி என்ற பிரச்சனையையும் மற்றும் தேவைப்பாடுகளையும் பூர்த்தி செய்வதாக எமது தயாரிப்புகள் திகழ்கின்றன என்றார்.